சந்திர ஹோரை :
வளர்பிறை காலத்தில் வரும் சந்திர ஹோரை மிக நல்ல ஹோரையாகும்.
இந்த ஹோரையில் திருமணம், சீமந்தம், குழந்தைகளுக்கு மொட்டையடித்து காது குத்துதல், பெண் பார்ப்பது, பதவியேற்பது, வேலைக்கு விண்ணப்பிப்பது, வங்கி கணக்கு துவங்குதல் ஆகியற்றைச் செய்யலாம்.
இந்த ஹோரை காலத்தில் எல்லா சுபகாரியங்களையும் செய்யலாம். குறிப்பாக பெண்கள் தொடர்பு கொண்ட காரியங்களையும் மிகவும் ஏற்றது. 
வியாபார விஷயமாகவோ அல்லது புனித யாத்திரையாகவோ பயணம் செய்ய ஏற்றது. பிறரைச் சந்தித்துப் பேசவும் செய்யலாம்.
சந்திர ஹோரையில் அம்பிகை வழிபாடு செய்வது மிகவும் நன்மை தரும்.

Comments

Popular Posts