ஹோரையின் சிறப்புகள்
சூரிய ஹோரை :
சூரிய ஹோரையில் அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள், வழக்கு தொடர்பான விடயங்கள் மேற்கொள்ள சிறப்பானதாக இருக்கும். உங்கள் மேலதிகாரிகளை சந்தித்தல், அரசியல் தலைவர்களை சந்தித்தல் போன்ற விஷயங்களை செய்யலாம்.
இந்த நேரத்தில் புதிதாக எந்த அலுவல்களையோ உடன் பாடுகளையோ செய்வது நல்லதல்ல,
சுபகாரியங்கள் செய்யயவும் இந்த ஹோரை ஏற்றதல்ல. இந்த ஹோரை நடக்கும் நேரத்தில் பொருள் ஏதேனும் காணாமல் போனால் கிடைப்பது அரிது. அப்படிக் கிடைக்குமானால் மிகவும் தாமதித்து அப்பொருளின் நினைவு மறைந்தபின் கிழக்கு திசையில் கிடைக்கலாம். இந்த நேரத்தில் உயில் சாசனம் எழுதலாம்.
சூரிய ஹோரையில் மந்திர உபதேசம் பெறலாம்.
Comments
Post a Comment